"அதிவேக 100 ரன்.." இந்திய அணி புதிய சாதனை

By 
irr

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்று வருகிறது. 4-வது நாள் ஆட்டத்தின்போது வெஸ்ட் இண்டீஸ் ஆல்அவுட் ஆனதும், இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.

விரைவாக அதிக ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய இந்திய அணி முடிவு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களான ரோகித் சர்மா- ஜெய்ஸ்வால் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். ரோகித் சர்மா 44 பந்தில் 57 ரன்களும், ஜெய்ஸ்வால் 30 பந்தில் 38 ரன்களும் சேர்த்தனர்.

அடுத்து வந்த இஷான் கிஷன் 34 பந்தில் 52 ரன்கள் விளாசினார். இந்தியா 24 ஓவரில் 181 ரன்கள் எடுத்திருக்கும்போது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இந்தியா 12.2 ஓவரில் 100 ரன்களை எடுத்தது. இதன்மூலம் விரைவாக 100 ரன்களை கடந்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

இதற்குமுன் 2001-ம் ஆண்டு ஆசிய டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வங்காளதேச அணிக்கெதிராக இலங்கை 13.2 ஓவரில் 100 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது 22 ஆண்டு கால சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.
 

Share this story