வேர்ல்ட் கப் மற்றும் ரூ.12 கோடி பரிசுக்கு இன்று பலத்த சண்டை : ஜெயிக்கப் போறது யாரு?

Fight for World Cup and Rs 12 crore prize today Who will win

இன்று நடைபெறும் உலகக் கோப்பைக்கான இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மிக மிரட்டலாய் மோத தயாராகி வருகின்றன.

ஆரோன் பிஞ்ச், கேன் வில்லியம்சன் தலைமையிலான இரு அணிகளும் ஏறக்குறைய, சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த உலக கோப்பையில் ‘டாஸ்’ தான் வெற்றியை தீர்மானிப்பதில் பிரதான பங்கு வகிக்கிறது என்ற கருத்துக்கு, ஆரோன் பிஞ்ச் "அது முக்கியமல்ல" என தெரிவித்துள்ளார்.

இரவில் பனியின் தாக்கத்தில், பந்துவீசுவது உண்மையிலேயே சவாலானதாகும். அத்தகைய சூழலில், பேட்டிங்குக்கு எளிதாகி விடுகிறது. 

இரண்டு அரைஇறுதியிலும் 2-வது பேட்டிங் செய்த அணிகள் வெற்றி கண்டதே அதற்குச் சாட்சி.

அத்துடன், துபாய் மைதானத்தில் நடப்பு தொடரில் நடந்துள்ள 12 ஆட்டங்களில் 11-ல் 2-வது பேட்டிங் செய்த அணிக்குத் தான் வெற்றி கிடைத்திருக்கிறது. எனவே டாசும் இந்த முறை கவனத்தை ஈர்த்துள்ளது.

ரூ. 12 கோடி பரிசு :

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 14 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 9-ல் ஆஸ்திரேலியாவும், 4-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. 

20 ஓவர் உலக கோப்பையில் ஒரே ஒரு முறை சந்தித்துள்ளது. 2016-ம் ஆண்டு தர்மசாலாவில் நடந்த அந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 8 ரன்னில் ஆஸ்திரேலியாவை வென்று இருந்தது.

சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.12 கோடியும், 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ. 6 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

போட்டிக்கான இரு அணிகளின், பட்டியல் வருமாறு:-

நியூசிலாந்து : மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், வில்லியம்சன் (கேப்டன்), கிளைன் பிலிப்ஸ், டிம் செய்பெர்ட், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், ஆடம் மில்னே, டிம் சவுதி, சோதி, டிரென்ட் பவுல்ட்.

ஆஸ்திரேலியா :

வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.

இந்திய நேரப்படி, இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
*

Share this story