முதல் இந்திய வீரர் விராட் கோலி : விறுவிறு சாதனை 10,000

First Indian Virat Kohli 10,000 record

டி20 கிரிக்கெட் போட்டிகளில், 10 ஆயிரம் ரன்களைக் கடந்த 5-வது சர்வதேச வீரர் விராட் கோலி ஆவார்.

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக் தொடரின் 39-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. 

இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. மும்பை அணிக்கு எதிராக அபாரமாக ஆடிய பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி 51 ரன் விளாசினார்.

இவர், தனது 13-வது ரன்னை கடந்தபோது டி20 அரங்கில் 10 ஆயிரம் ரன்னை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும், 10 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது சர்வதேச வீரரானார். 

இதுவரை 314 போட்டியில் 5 சதம், 74 அரைசதம் உள்பட 10,038 ரன்கள் எடுத்துள்ளார்.

ஏற்கனவே, வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (14,275 ரன்), பொல்லார்டு (11,195 ரன்), பாகிஸ்தானின் சோயப் மாலிக் (10,808 ரன்), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (10,019 ரன்) ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
*

Share this story