டோனியை வீடியோ எடுத்து, குயிட் ரியாக்சன் கொடுத்த விமான பணிப்பெண் : வைரலாகும் நிகழ்வு.. 

By 
kuy

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி. டி20 உலகக் கோப்பை, கிரிக்கெட் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பையை வென்று கொடுத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை சாம்பியன்ஸ் டிராபி வாங்கி கொடுத்துள்ளார்.

கடந்த ஐபிஎல் தொடரில் முழங்கால் வலியுடன் விளையாடினார். தொடர் முடிந்த பிறகு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு ஓய்விற்காக ராஞ்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அங்கு ஓய்வில் இருந்து வந்தார்.

டோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலமாக எல்ஜிஎம் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் டோனி, தனது மனைவியுடன் கலந்து கொண்டார். இதற்காக டோனி தனது மனைவி சாக்சியுடன் சென்னை வந்த வீடியோ அப்போது வெளியானது.

இந்நிலையில், டோனி அதே ஹேர்ஸ்டைல் மற்றும் அதே காஸ்ட்யூம் உடன் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் டோனி விமானத்தில் தூங்கியபடி வருகிறார். அருகில் அவரது மனைவி சாக்சி அமர்ந்திருக்கிறார்.

இதனை விமானப்பணிப்பெண் வீடியோவாக தனது மொபையில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விமான பணிப்பெண் கொடுத்த ரியாக்சன் குயிட்டாக இருந்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

Share this story