கேப்டன் பதவிக்கு, பும்ரா பொருத்தமாக இருப்பாரா? : ஆஷிஷ் நெஹ்ரா கருத்து

For the captaincy, would Bumra be suitable  Comment by Ashish Nehra

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக, இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்தார். 

அப்போதிருந்தே, நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் கேப்டனாக யார் பொறுப்பேற்க வேண்டும் என்று விவாதித்து வருகின்றனர். 

ரோகித்-ராகுல் :

துணை கேப்டனான ரோகித் சர்மாவின் பெயர் அதிகமாக பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்
இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா. 

பொருத்தமாக இருக்கும் :

அஷிஷ் கூறியதாவது,'
'இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுலின் பெயர்கள் அடிபடுகின்றன. 

என்னை பொறுத்தவரை, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை இந்த பதவிக்கு நியமித்தால், பொருத்தமாக இருக்கும். 

அவர் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார். போட்டியை நன்றாக புரிந்து செயல்படுகிறார்' என்றார்.
*

Share this story