நண்பேன்டா : ஸ்டூவர்ட் பிராடுக்காக கண்ணீர் விட்டு அழுத ஆண்டர்சன்.. 

By 
bro1

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார். ஸ்டூவர்ட் பிராட் குறித்து ஆண்டர்சனிடம் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு பதில் சொல்ல முடியாமல் ஆண்டர்சன் கண்ணீர் விட்டு அழுதார்.

பின்னர் பேசிய ஆண்டர்சன், பிராட் என்னுடைய சிறந்த நண்பர். அவர் பல வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் எப்போதுமே எனக்காக உறுதுணையாக இருந்திருகிறார் என்று கூறி கொண்டே அழுகையை அடக்க முடியாமல் ஆண்டர்சன் பேசாமல் சென்றுவிட்டார்.

இதை பார்க்கும் போது மனம் மிகவும் கஷ்டமாக இருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் ஆண்களும் அழுவார்கள். தங்களுடைய நண்பர்களுக்காக என்று பதிவிட்டு இருக்கிறார்கள்.

இதே போன்று பிராட் இன்னும் 2 ஆண்டுகள் விளையாடி இருந்தால், முரளிதரன் அல்லது குறைந்தபட்சம் ஆண்டர்சன் சாதனையாவது முறியடித்து இருப்பார் என்றும், ஆனால், ஆண்டர்சனின் சாதனையை முறியடிக்க கூடாது என்பதற்காக பிராட் இப்படி செய்து இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

 

Share this story