ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவராக கங்குலி நியமனம்..ஏனென்றால்..
 

Ganguly appointed ICC cricket committee chairman

அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக, சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

2012 முதல் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக, இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே பணியாற்றினார். 

அவருடைய பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, அப்பதவிக்கு பிசிசிஐ தலைவரும் முன்னாள் வீரருமான சவுரவ் கங்குலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் விதிமுறைகள் தொடர்பான முக்கியமான முடிவுகளை ஐசிசி கிரிக்கெட் குழு தீர்மானித்து வருகிறது.

கங்குலியின் அனுபவம் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உதவியாக இருக்கும். 

கடந்த 9 வருடங்களாக டிஆர்எஸ், விதிமுறையை மீறிய பந்துவீச்சு உள்பட பல முக்கியமான முடிவுகளின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளே முன்னேற்றம் ஏற்படுத்தினார்' என்று ஐசிசி தலைவர் கிரேக் பார்கிளே கூறியுள்ளார்.
*

Share this story