தோல்விக்கு நானே காரணம் : ஹர்திக் பாண்ட்யா ஒப்புதல் 

By 
har1

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி கடைசி 20 ஓவர் போட்டியில் தோல்வியை தழுவியது. இதன்மூலம் 6 ஆண்டுகளுக்கு பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர் தொடரை இழந்தது.

இந்த தோல்வி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

நாங்கள் பேட்டிங்கில் சாதிக்க தவறிவிட்டோம். அது ஆட்டத்தின் தன்மையை மாற்றிவிட்டது. இந்த ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அதை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டு ஆடியது. 10 ஓவர்களுக்கு பிறகு நாங்கள் ஆட்டத்தின் தன்மையை இழந்தோம்.

மற்ற வீரர்கள் நன்றாக ஆடினார்கள். நான் அதிக நேரம் எடுத்துக் கொண்டேன். சிறப்பாக விளையாட தவறி விட்டேன். தோல்விக்கு நானே காரணம். தொடரை இழந்ததற்காக நான் பெரிதும் வருத்தப்படவில்லை. அடுத்த 20 ஓவர் உலக கோப்பைக்கு (2024) இன்னும் நாட்கள் அதிகமாக இருக்கிறது.

அடுத்து 50 ஓவர் உலக கோப்பை பற்றிய சிந்தனை தான் இருக்கிறது. தோல்வி சில நேரங்களில் நல்லது. அது நிறைய விஷயங்களை கற்றுக் கொடுக்கிறது. இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார். 

Share this story