'அவர்' உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர் : சுப்மன் கில் கருத்து

By 
subman

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், ஆசிய கோப்பை போட்டியில் இதுவரை 3 போட்டிகளில் 168 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 84 ஆகும். இன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் பாபர் அசாம் உலகத்தரம் வாய்ந்த வீரர் என இந்தியாவின் தொடக்க வீரர் சுப்மான் கில் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அணியும் அவரை பாராட்டுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

பாபர் அசாம் போன்ற பாகிஸ்தான் வீரர்களின் விளையாட்டு, பின்பற்றுவீர்களா? என்ற கேள்விக்கு, ''ஆம். நிச்சயமாக நாங்கள் அவரை பின்பற்றுவோம். ஒரு வீரர் நன்றாகச் செயல்படும்போது, அவர்கள் ஏன் இவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறார்கள்? அவர்களின் சிறப்பு என்ன? என்பதைக் கண்டறிய அனைவரும் அவர்களை பார்க்கிறார்கள். . பாபருக்கும் அதுவே பொருந்தும். அவர் ஒரு உலகத் தரம் வாய்ந்த வீரர், நாங்கள் அனைவரும் அவரைப் போற்றுகிறோம்'' என்றார்.

 

Share this story