4-வது முறையாக விக்கெட்டை இழந்தார்.. ட்ரெண்டிங்கில் பாபர் அசாம்..

பாகிஸ்தான்- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் மேத்யூஸ், தனஞ்செயா டி சில்வா ஆகியோரின் ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 312 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 13 ரன்னில் பிரபாத் ஜெயசூர்யா பந்து வீச்சில் அவுட் ஆனார்.
பிரபாத் ஜெயசூர்யாவுக்கு எதிராக 5 இன்னிங்சில் விளையாடிய பாபர் அசாம் 143 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 15 பவுண்டரி 3 சிக்சர் அடங்கும். முக்கியமாக 4 முறை ஆட்டமிழந்துள்ளார். பிரபாத் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பாபர் அசாம் திணறி வருகிறார் என ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். இதனால் டுவிட்டரில் பாபர் அசாம் டிரெண்டாகி வருகிறார்.