டோனி- யுவராஜ் இடத்துக்கு அவர்தான் பொருத்தமானவர் : முன்னாள் இந்திய வீரர் கருத்து

 

By 
sin1

இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டி20 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் மூலம் ரிங்கு சிங் மற்றும் பிரதிஷ் கிருஷ்ணா ஆகியோர் இந்திய அணிக்கு அறிமுகமானார்கள். ஐபிஎல் தொடர் மூலம் ரிங்கு சிங் இந்திய அணிக்கு தேர்வு ஆகியுள்ளார். அவர் கொல்கத்தா அணிக்காக பினிஷிங் ரோல் செய்தார். ஒரு போட்டியில் ஒரே ஓவரில் 5 பந்துகளை சிக்சர் விளாசி அணிக்கு வெற்றியை தேடி தந்தார். இதன் மூலம் தான் இவர் பிரபலமாக காணப்பட்டார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கிரண் மோர் கூறியதாவது:-

இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தேன். அவர் 5 அல்லது 6-வது இடத்தில் சிறப்பாக செயல்படுவார். ஒரு சிறந்த ஃபினிஷராகவும் அவரால் இருக்க முடியும். டோனியையும் யுவராஜ் சிங்கையும் நாம் அனைவரும் பார்த்திருப்போம். அதன் பிறகு அவர்களைப் போன்ற ஒரு வீரர் கிடைக்கவில்லை.

நாங்கள் அத்தகைய வீரர்களை உருவாக்க முயற்சித்தோம். ஆனால் அது இதுவரை வேலை செய்யவில்லை. ரிங்கு ஒரு சிறந்த பீல்டரும் கூட. உள்நாட்டு கிரிக்கெட்டிலும் நான் அவரைப் பார்த்திருக்கிறேன். அவர் நிறைய மேம்பட்டு இருக்கிறார் என்று நான் உணர்கிறேன்.

ஹர்திக் பாண்டியா ஒரு பேட்டராக மாறி, 3 அல்லது 4-வது வரிசையில் விளையாடுவதால், ஆட்டத்தை முடித்துக்கொடுக்கக்கூடிய ஒருவர் உங்களுக்குத் தேவை. உங்களிடம் அக்சர் படேல் போன்ற ஒருவர் இருக்கிறார், ஆனால் ரிங்கு சிங்தான் அந்த இடத்துக்கு பொருத்தமானவர். இவ்வாறு அவர் கூறினார்.
 

Share this story