ஹாக்கி தர்பார் : இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் மோதல்.. ரசிகர்கள் பரபரப்பு.. 

By 
im1

அடுத்த ஆண்டு நடைபெறும் முதலாவது 5 பேர் ஆக்கி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி சுற்றான ஆசிய மண்டல ஆண்கள் தொடர் ஓமன் நாட்டின் சலாலா நகரில் செவ்வாய்கிழமை தொடங்கியது.

இதன் லீக் சுற்று முடிவில் இந்திய அணி 5 போட்டிகளில் 4 வெற்றி, 1 தோல்வி உடன் அரையிறுதிக்கு முன்னேறியது. அதன்படி இன்று நடைபெற்ற அரையிறுதியில் இந்திய அணி மலேசியாவுடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 10-4 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெறும் முதலாவது 5 பேர் ஆக்கி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் 7-3 என்ற கோல் கணக்கில் ஓமனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ளது.

 

Share this story