கிரிக்கெட் ரசிகர்களுக்கு, ஹாட் ஸ்டார் கொடுத்த இன்ப பரிசு..
Aug 23, 2023, 18:40 IST
By

ஆசிய கோப்பை தொடர் வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கிறது. இதனையடுத்து இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கு தயாராக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஹாட் ஸ்டார் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை மொபைல் பயனர்கள் இலவசமாக பார்க்கலாம் என அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.