வேர்ல்ட் கப் மேட்சில், இந்திய அணியின் நிலை எப்படி? : சச்சின் விளக்கம்

How is the Indian team in the World Cup match  Sachin's explanation

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 

இதில், இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணியுடன் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது. 

இதனால், இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. 

இந்நிலையில், இந்திய அணியின் மோசமான செயல்பாடுகள் குறித்து சச்சின் தெண்டுல்கர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது :
 
இந்திய அணிக்கு, இது கடினமான நாளாக அமைந்தது. அணியின் செயல்பாடுகள் குறித்து அதிகம் பேசுவதற்கு ஒன்றுமில்லை.  

நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் தங்களது வியூகத்தை களத்தில் சிறப்பாக செயல்படுத்தினார். நமக்கு எதிரான ஆட்டத்தில், நியூசிலாந்து முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது.

எதிரணி பவுலர்கள் ஆதிக்கம் காரணமாக நம்மால் ஒன்று, இரண்டு ரன்கள் கூட எடுக்க முடியவில்லை. 

இதனால், நம் வீரர்கள் பெரிய ஷாட் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தனர்' என்றார்.

Share this story