ஹர்திக் பாண்ட்யாவை நினைத்து நான் எப்போதும் கவலைப்படுவேன் : கபில்தேவ்

By 
pandya5

இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி குறித்து, இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியதாவது:-

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 50 ஓவர் உலகக்கோப்பை போட்டி நடைபெறுகிறது. அதற்கு நீங்கள் தயாராக வேண்டும். இந்த மெகா போட்டிக்கு முன்பாக இந்தியாவுக்கு போட்டி பயிற்சிகள் தேவை.

எனவே இந்திய அணி அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டும். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையிலும் காயங்கள் ஒரு பகுதியாகும். ஹர்திக் பாண்ட்யாவை நினைத்து நான் எப்போதும் கவலைப்படுவேன். ஏனென்றால் அவர் மிக விரைவாக காயமடைகிறார்.

முன்னணி வீரர்கள் அனைவரும் உடற்தகுதி மற்றும் நன்றாக இருந்தால் இந்தியா ஒரு முழுமையான அணியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னணி வீரர்கள் லோகேஷ் ராகுல், பும்ரா, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் காயம் அடைந்து அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this story