எனக்கு இந்த பாக்கியம் கிடைத்ததில் மகிழ்ச்சி : நடிகை மீனா பெருமிதம்

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் குறித்த அட்டவணை சில நாட்கள் முன்னர் அறிவிக்கப்பட்டது.
இந்த தொடருக்காக இந்திய அணி வீரர்கள் நேற்று பயிற்சி முகாமை தொடங்கினர். இந்த முகாமில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலகக் கோப்பை 2023-ஐ நடிகை மீனா அறிமுகப்படுத்தி உள்ளார். ஈஃபிள் டவருக்கு கீழே நின்று உலகக் கோப்பையுடன் நடிகை மீனா எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவரது இன்ஸ்டா பக்கத்தில் உலகக் கோப்பையை வைத்து எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ள நடிகை மீனா விரைவில் நடைபெற உள்ள ஆண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் வெற்றிக் கோப்பையை அறிமுகப்படுத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.