டி20 உலக கோப்பை கிரிக்கெட் : போட்டிக்கான இடங்களை அறிவித்தது ஐசிசி

* டி20 உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை இப்போட்டியை இணைந்து நடத்துகின்றன. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 4-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.
இந்நிலையில், டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்களை ஐசிசி அறிவித்துள்ளது. மேற்கிந்திய தீவுகளில் ஆன்டிகுவா-பார்புடா, பார்படாஸ், கயானா, செயின் ட் லூசியா, செயின் ட் வின் சென் ட், டிரினிடாட்-டுபாகோ ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதேபோல் அமெரிக்காவின் டல்லாஸ், புளோரிடா மற்றும் நியூயார்க் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.
* ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்குகின்றன. தொடக்க விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் தொடங்கி விட்டது. இதற்கிடையே, ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது.
3 வீராங்கனைகள் பங்கேற்க அனுமதி மறுத்ததற்காக சீனாவிற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்கவிருந்த மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர், தனது சீன பயணத்தை ரத்து செய்துள்ளார். இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், வீராங்கனைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.