உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் :  இந்திய அணியில் அஸ்வின்..

By 
win2

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் துவங்குகிறது. இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடருக்கான இந்தியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. 

இந்த நிலையில், உலகக் கோப்பை 2023 தொடருக்கான இந்திய அணியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருந்த அக்சர் பட்டேல், காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தற்போது அஸ்வின் சேர்க்கப்பட்டு இருக்கிறார். 

முன்னதாக உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து பலர் ஏமாற்றம் தெரிவித்து இருந்தனர். தற்போது இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்பட்டு இருப்பது அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய அணி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

2011, 2015 என இரு உலகக் கோப்பை தொடர்களில் அஸ்வின் விளையாடி இருக்கும் நிலையில், தற்போது 2023 உலகக் கோப்பை தொடரில் களமிறங்குவதன் மூலம், மூன்றாவது 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அஸ்வின் விளையாட இருக்கிறார்.

Share this story