இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி: வெல்வது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? ஓர் ஆய்வு..

By 
inu

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் பைனலில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பல பரிட்சை நடத்துகிறது. 

இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று டென்ஷன் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இந்த தொடரில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஏற்கனவே லீக் சுற்றில் மோதியது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய 10 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசுர பலத்தில் இருக்கிறது.

இந்த நிலையில், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோற்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இதற்கான ஐந்து காரணத்தை தற்போது பார்க்கலாம். 

காலம் காலமாக ஆஸ்திரேலிய அணியின் பலம் என்று பார்த்தாலே அவர்களுடைய வேக பந்துவீச்சு தான். எத்தகைய பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் தங்களுடைய அனல் பறக்கும் வேகப் பந்து வீச்சால் ஆஸ்திரேலிய வீரர்கள் நெருக்கடி கொடுப்பார்கள். ஆனால் இம்முறை வங்கதேசத்தை கூட அவர்கள் 300 ரன்களுக்கு மேல் அடிக்க விட்டார்கள். 

மேலும், ஆப்கானிஸ்தான் கூட ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய பந்துவீச்சில் வீக்னெஸ் இருப்பது தெரிகிறது. மேலும் ஆஸ்திரேலிய அணியில் உள்ள ஒரு பெரிய குறை அவர்களுடைய பேட்டிங்தான். 

இந்த உலகக்கோப்பை தொடரில் ஏதேனும் ஒரு வீரர் தான் அந்த அணியை காப்பாற்றி இருக்கிறார். தவிர ஒட்டுமொத்த அணியும் ஒருங்கிணைந்து பேட்டிங்கில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. ஸ்மித், வார்னர், லாபஸ்சேன் போன்ற வீரர்களும் தடுமாறுகிறார்கள். 

இதேபோன்று மூன்றாவது காரணம் ஆஸ்திரேலிய அணியில் நிறைய இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். அவர்களை கையாள அஸ்வினை அணிக்குள் கொண்டு வந்தால் அது ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். அப்படி அஸ்வின் விளையாடவில்லை என்றாலும் கூட குல்தீப், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட ரெக்கார்ட் வைத்திருக்கிறார். 

நான்காவது காரணம் ஆஸ்திரேலிய அணி இந்த உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து எட்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் இந்தியாவுக்கு எதிராக அவர்கள் தோல்வியை தழுவி இருக்கிறார்கள். இதனால் இறுதிப்போட்டியில் மோதும்போது இயற்கையாகவே அந்த தோல்வி ஆஸ்திரேலிய வீரர்களின் கண்முன் வந்து போகும். இதன் மூலம் மனதளவில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பின்னடைவு ஏற்படலாம். 

ஐந்தாவது காரணம் இந்தியாவின் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள ஆஸ்திரேலியாவுக்கு நிச்சயம் சிக்கல் ஏற்படலாம். எப்போதெல்லாம் இந்த தொடரில் பலம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்களை ஆஸ்திரேலியா எதிர் கொண்டதோ அப்போதெல்லாம் தடுமாறி இருக்கிறது. ஆஸ்திரேலியாவை பார்த்து பயந்து நடுங்கிய காலம் எல்லாம் மழை ஏறிவிட்டது. அவர்களை நிச்சயம் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உடன் இந்தியா வீரர்கள் விளையாடினால் வெற்றி நிச்சயம்.

 

Share this story