ரெம்பவும் வருத்தப்படுறேன், உங்களை பிரிய என்னால முடியலை : சானியா மிர்சா ஃபீல்

By 
I'm so sorry, I can not love you Sania Mirza Feel

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கு பிறகு, இந்த சீசனுடன் ஓய்வு பெறப் போவதாக சானியா மிர்சா ஏற்கனவே தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் நடந்த கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் சானியா- ராஜீவ்ராம் ஜோடி தோல்வி அடைந்தது.

அவசரம்-வருத்தம் :
 
இந்த தோல்வியை தொடர்ந்து, டென்னிஸ் போட்டியில் இருந்து சானியா விடைபெற்றதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து சானியா மிர்சா கூறியதாவது :

இந்த சீசனுடன் ஓய்வு பெற இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தேன். 

இதுபற்றியே தொடர்ந்து கேட்கின்றனர். ஓய்வு முடிவை முன்னதாக அவசரமாக அறிவித்ததற்காக மிகவும் வருந்துகிறேன். ரசிகர்களை பிரிவதில் விருப்பமில்லை.

என்னை பொறுத்தவரையில், இந்த ஆண்டு முழுவதும் போட்டிகளில் விளையாடுவேன்.

வெற்றி அல்லது தோல்வி எதுவாக இருந்தாலும் 100 சதவீத திறமையை வெளிப்படுத்துகிறேன். சில நேரங்களில் வெற்றி கிடைக்கும். ஏமாற்றமும் வரும். 

நான் விளையாடும் போட்டிகள் அனைத்திலும் வெற்றிபெற விரும்புகிறேன். விரைவில் எனது ஓய்வு முடிவை அறிவிப்பேன்' என்றார்.
*

Share this story