"ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற நினைக்கிறேன், ஆனால்.." மனம் திறந்த கேப்டன் டோனி

 

By 
dhonicsk

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபாரமாக வெற்றி பெற்று, 5-வது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது. இந்நிலையில், வெற்றி குறித்தும், அவரது ஓய்வு குறித்தும் டோனியிடம் கேட்கப்பட்டது. இதுகுறித்து டோனி கூறியதாவது:-

மிகவும் உணர்வுப்பூர்வமான இறுதிப்போட்டியாக இந்த போட்டியை பார்க்கிறேன். எனது கண்கள் குளமாகின. என்னுடைய ஓய்வை அறிவிக்க இதுதான் சிறந்த தருணம். ஆனால், எல்லா இடங்களிலும் எனக்கு கிடைத்த அன்பு அளவு கடந்தது.

இங்கிருந்து இத்துடன் கிளம்பி விடுவது எளிதானது. ஆனால் கடினமான விஷயம் என்னவென்றால், 9 மாதங்கள் கடினமாக உழைத்து மற்றொரு ஐபிஎல் விளையாட முயற்சிப்பது. அது என்னிடம் இருந்து கிடைக்கும் பரிசாக இருக்கும். அது என்னுடைய உடலுக்கு எளிதானதாக இருக்காது.

ஓய்வு குறித்து யோசிக்க இன்னும் 8 முதல் 6 மாதம் இருக்கிறது. சென்னை அணி ரசிகர்கள் தங்கள் அன்பையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திய விதத்திற்காக, இது அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய ஒன்று. இவ்வாறு அவர் கூறினார். 

Share this story