என் வாழ்வின் முக்கிய தேதி '18'  : விராட்கோலி நெகிழ்ச்சி
 

18j

ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் மே 21 முடிவடையவுள்ள நிலையில் ஒரே ஒரு அணி (குஜராத்) மட்டுமே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. மற்ற 3 இடத்தை பிடிக்க 7 அணிகள் போட்டி போடுகின்றனர்.

இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க பெங்களூர் அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். அந்த அணி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் இருக்கிறது.

ஐதராபாத் 4 வெற்றி, 8 தோல்வியுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது. இந்நிலையில் தனது ஜெர்சி நம்பரான 18 குறித்து விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

18 நம்பர் ஜெர்சியை நானாக கேட்டுப்பெறவில்லை. அவர்களாகவே எனக்கு கொடுத்தது. அதன்பிறகு அது எனது வாழ்வின் முக்கிய எண்ணாக மாறிவிட்டது.

நான் முதன்முதலில் இந்தியாவுக்காக விளையாடியது ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி ஆகும். எனது அப்பா டிசம்பர் 18 உயிரிழந்தார். என் வாழ்வின் முக்கிய தேதிகள் 18-ஆக மாறிப்போனது. இவ்வாறு அவர் கூறினார். 

 

Share this story