நடப்பு ஐபிஎல் சீசனில், எந்த அணி வலுவாக உள்ளது? : கோச்சர் ரிக்கி பாண்டிங் விளக்கம்

By 
rick

ராஜஸ்தான் ராயல்ஸ் வலுவான அணியாக இருப்பதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 

இன்று 16-வது ஐபிஎல் சீசன் தொடங்க உள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த சீசனில் ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டியில் விளையாடி தோல்வியை சந்தித்தது. 

அணிக்கு வலு சேர்க்கும் வகையில் ஜோ ரூட் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோரை இந்த சீசனுக்காக ஏலத்தில் எடுத்துள்ளது ராஜஸ்தான். 

இந்நிலையில், அனைத்து அணிகளும் சம பலத்துடன் இருப்பதாகவும். ராஜஸ்தான் அணி வலுவாக இருப்பதாகவும் பாண்டிங் தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் சீசனில் ஒரு அணி தொடக்கம் முதல் இறுதி வரை ஆதிக்கம் செலுத்துவது பெரிய விஷயம். 

அதனால், யார் வெல்வார்கள் என சொல்வதும் கடினம். கடந்த ஆண்டு புதிய அணியான குஜராத் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 

கடந்த முறை, இறுதிப் போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் அணி இந்த முறை வலுவான அணியை அதனை அடிப்படையாக வைத்தே கட்டமைத்துள்ளது. ஏலத்தில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். 

மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் ராஜஸ்தான் வலுவாக உள்ளது. என அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள யாஷ் துல் மற்றும் அமன் கான் ஆகியோருக்கு இந்த சீசன் சிறப்பானதாக அமையும் என பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Share this story