புள்ளிகள் பட்டியலில், மீண்டும் முதலிடம் பிடித்தது டெல்லி : மற்ற அணிகள் நிலை..

In the points table, again topped the list Delhi Other teams position ..

ஐபிஎல் 2021 கிரிக்கெட் லீக்கின் 2-வது பாதி ஆட்டங்கள், கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

இதுவரை 50 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. 

டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் தலா 13 போட்டிகளில் விளையாடியுள்ளன. மற்ற 4 அணிகளும் தலா 12 போட்டிகளில் விளையாடியுள்ளன.

இதில், டெல்லி கேப்பிடல்ஸ் 10 போட்டிகளில் வெற்றி பெற்று 20 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்து பிளே ஆஃப்ஸ் சுற்றில் நுழைந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் 9-ல் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்து பிளே ஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்து, பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
 
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 6 வெற்றிகளுடன் 4-வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் 5 வெற்றிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன. 

ராஜஸ்தான் ராயல்ஸ் 5 வெற்றிகளுடன் 6-வது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் 5 வெற்றிகளுடன் 7-வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஒரு வெற்றியுடன் கடைசி இடத்திலும் உள்ளன.
*

Share this story