டெஸ்ட் மேட்சில், ஸ்ரேயாஸ் இடம்பெறுவாரா? : கேப்டன் ரகானே தகவல்

In the Test match, will Shreyas feature  Captain Raghane Info

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நாளை தொடங்குகிறது.

இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரகானே பொறுப்பு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

ரோகித் சர்மா, பும்ரா, ரிஷாப் பண்ட், முகமது ஷமி ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் காயத்தால் வெளியேறிவிட்டார்.

இதனால், வழக்கமான டெஸ்ட் அணியில் இடம்பெறும் மூன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அணியில் இல்லை. அவர்களுக்குப் பதிலாக, புதிய நபர்களை ஆடும் லெவன் அணியில் சேர்க்க வேண்டும். 

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிராக நாளை தொடங்கும் முதல் போட்டியில் ஷ்ரேயாஸ் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார் என பொறுப்பு கேப்டன் ரகானே உறுதிப்படுத்தியுள்ளார். 

ஷுப்மான் கில், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்புள்ளது.

இதன்மூலம், மும்பையை சேர்ந்த ஷ்ரேயாஸ், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகவுள்ளார். ஷ்ரேயாஸ் முதல்தர கிரிக்கெட்டில் 4,592 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 52.18 ஆகும். 

ஆனால், ரெட் பந்தில் கடைசியாக 2019-ம் அண்டு இரானி கோப்பை தொடரில் விளையாடியுள்ளார்.
*

Share this story