இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதல் : மீண்டும் 6-வது நாள் ஆட்டம்..

By 
India-New Zealand clash 6th day match again ..

விராட் கோலி தலைமையிலான இந்தியா- வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் நேற்று தொடங்குவதாக இருந்தது.

மழையால் ரத்து :

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முதல்முறையாக நடத்தும் இந்த போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு, அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், முதல் நாள் ஆட்டத்திலேயே மழை விளையாடி விட்டது. மழை காரணமாக ஒரு பந்து கூட வீச முடியாமல் ரத்து செய்யப்பட்டது.

6-வது நாள் :

இந்த போட்டிக்கான விதிமுறைகள் குறித்து ஐ.சி.சி. ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. மழையால் ஆட்டம் பாதிக்கப்படும்போது மாற்று நாளில் போட்டியை நடத்தலாம் என்று தெரிவித்தது. 23-ந் தேதியை அதாவது 6-வது நாளை மாற்று நாளாக அறிவித்தது. இதுகுறித்து போட்டி நடுவர் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தது.

முதல் நாளில் 6 மணி நேர இழப்பு ஏற்பட்டு விட்டதால் மாற்று நாளில் இந்த போட்டி நடைபெற வாய்ப்பு இருக்கிறது. இதனால் 6-வது நாளில் இந்த டெஸ்ட் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து போட்டி நடுவர் 5-வது நாள் ஆட்டத்தின்போதுதான் தனது முடிவை அறிவிப்பார்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது. வானிலை அறிவிப்புபடி அங்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Share this story