இன்று, இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதல்: மைதானத்திற்கு வெளியில் ஜெர்சியை அணிந்து ரசிகர்கள் பரபரப்பு..
Oct 14, 2023, 17:06 IST
By

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று உலகக் கோப்பையின் 12 ஆவது லீக் போட்டி நடக்கிறது. இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் போட்டிக்கு முன்னதாக பிற்பகல் 12.30 மணிக்கு இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் பின்னணி பாடகர்களான சங்கர் மகாதேவன், அரிஜித் சிங், சுக்விந்தர் சிங் ஆகியோர் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினர். மேலும், ஒரு இன்னிங்ஸ் முடிவின் போதும் 10 நிமிட நிகழ்ச்சியும் நடந்தது.
இந்த நிலையில், போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. முன்னதாக, காலை 9 மணி முதலே மைதானத்திற்கு வெளியில் ரசிகர்கள் வரத் தொடங்கியுள்ளனர். மேலும், எங்கு பார்த்தாலும் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்தவாறு ரசிகர்கள் அங்கும் இங்குமாக நடந்து செல்லும் காட்சிகள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.