ஆசிய விளையாட்டுப் போட்டியில், இன்று 2 வெண்கலம் வென்றது இந்தியா..

By 
sca3

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று (அக்.2) காலை ஸ்பீட் ஸ்கேட்டிங் 3000 மீட்டர் ரிலேவில் 2 வெண்கலம் வென்றது இந்தியா. ஆடவர் மற்றும் மகளிர் இந்திய ஸ்கேட்டிங் அணியினர் வெண்கலம் வென்றுள்ளனர்.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. நேற்று ஒரே நாளில் 3 தங்கம் உள்பட 15 பதக்கங்களை இந்தியா வென்றிருந்தது. இந்த சூழலில் இன்று காலை ஸ்பீட் ஸ்கேட்டிங் விளையாட்டில் இரண்டு வெண்கலம் வென்றுள்ளது இந்தியா.

சஞ்சனா பத்துலா, கார்த்திகா ஜெகதீஸ்வரன், ஹீரல் சாது மற்றும் ஆரத்தி கஸ்தூரி ராஜ் ஆகியோர் அடங்கிய மகளிர் அணியினரும், ஆர்யன் பால், ஆனந்த் குமார், சித்தாந்த், விக்ரம் ஆகியோர் அடங்கிய ஆடவர் அணியினரும் வெண்கலம் வென்றுள்ளனர்.

Share this story