இந்திய கிரிக்கெட் வாரியம், தவறு செய்துவிட்டது : பாக். முன்னாள் கேப்டன் கருத்து

By 
Indian Cricket Board, made a mistake: Pac. Former captain commented

பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், முன்னாள் விக்கெட் கீப்பருமான ரஷீத் லத்தீப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது :

விராட் கோலி விவகாரத்தில், இந்திய கிரிக்கெட் வாரியம் (கங்குலி தலைமையிலான பிசிசிஐ) கையாண்ட விதம் சரியில்லை. 

ஒருநாள் போட்டிக்கான அணியின் கேப்டன் பதவியில் இருந்து, அவரை நீக்கியதில் கிரிக்கெட் வாரியம் தவறு செய்துவிட்டது. 

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், நீண்டகாலம் பணியாற்றிய கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவெடுத்தாலோ அல்லது நீக்கப்பட்டாலோ அவர் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடாமல் இருப்பது சாத்தியமில்லை. இது எனது தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து அறிவேன்.

எங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவருடன் பேசிய பிறகுதான் 2004-ல் நான் கேப்டன் பதவியில் இருந்து விலகி இருந்தேன். 

அதனால்தான், இந்த குறிப்பிட்ட பிரச்சினையை பி.சி.சி.ஐ. கையாண்ட விதத்தில் தவறு செய்துவிட்டதாக நினைக்கிறேன். இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.

பல ஆண்டுகளாக கேப்டனாக இருப்பவரை மாற்றுவது என்பது எப்போதும் எளிதானதல்ல. 

5 வருடங்கள் அல்லது அதற்கு மேலாக நீங்கள் கேப்டனாக வெற்றிபெற்றால், அணியில் உள்ளவர்கள் அவருக்கு விசுவாசமாக இருப்பார்கள். 

எனவே, அணியின் சூழலை இது சீர்குலைக்கும்' என்றார்.
*

Share this story