உலக மல்யுத்த போட்டி : தங்கம் வென்றார்  இந்திய வீராங்கனை பிரியா மாலிக்..

By 
priya11

20 வயதுக்குட்பட்டோர் ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டானில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 76 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பிரியா மாலிக் தங்கம் வென்றார்.

அவர் இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் லாரா செலிவ் குஹனை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். பிரியா மாலிக்குக்கு இடது கண்ணுக்கு மேலே காயம் ஏற்பட்டது. ரத்தம் வழிந்த போதிலும் அவர் வெற்றி பெற்று அசத்தினார்.

இதன் மூலம் அவர் ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற 2-வது இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார். கடந்த ஆண்டு ஆன்டிம் பங்கல் தங்கம் வென்று இருந்தார்.

தற்போதைய போட்டித் தொடரில் ஆன்டிம் பங்கல், 53 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



 

Share this story