ஐபிஎல் பரபரப்பு : இன்று கலக்கப் போறது சென்னையா? கொல்கத்தாவா? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

By 
cskkk

16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இதுவரை சென்னை அணி 4 வெற்றி (லக்னோ, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் அணிகளுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (குஜராத், ராஜஸ்தான் அணிகளிடம்) 8 புள்ளிகள் பெற்றுள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை துவம்சம் செய்த உத்வேகத்துடன் சென்னை அணி இந்த ஆட்டத்தில் களம் காணுகிறது. 

கொல்கத்தா அணி 6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (பெங்களூரு, குஜராத் அணிகளுக்கு எதிராக), 4 தோல்வி (பஞ்சாப், ஐதராபாத், மும்பை. டெல்லி அணிகளிடம்) கண்டுள்ளது. 

அந்த அணி தனது முந்தைய 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது. 

இந்நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஆதிக்கத்தை தொடர சென்னை அணியும், சரிவில் இருந்து மீண்டு வர கொல்கத்தா அணியும் மல்லுக்கட்டும் என்பதால், இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story