ஐபிஎல் வெப்பம் : டெல்லியை வீழ்த்தி, மும்பை 'த்ரில்' வெற்றி; ஆடிய ஆட்டம் நிலவரம்..

By 
ipl67

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் ஆட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. 

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் டேவிட் வார்னர் நிதானமாக ரன்கள் சேர்த்தார். 

மறுமுனையில் அதிரடியாக ஆட முற்பட்ட பிருத்வி ஷா 15 ரன்கள், மணீஷ் பாண்டே 26 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் யாஷ் துல் (2), ரோவன் பாவெல் (4), லலித் யாதவ் (2) என சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால் அணியின் ரன்ரேட் சரிந்தது. 

மறுமுனையில் வார்னர் அரை சதம் கடந்து ஆறுதல் அளித்தார். வார்னருடன் இணைந்த அக்சர் பட்டேல், மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன் குவித்தார். 22 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் அரை சதம் கடந்த அக்சர் பட்டேல் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 19-வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். 

அவரைத் தொடர்ந்து வார்னர் 51 ரன்னிலும், குல்தீப் யாதவ் ரன் எதுவும் எடுக்காமலும், அபிஷேக் பாரெல் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அந்த ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகள் சரிந்தன. கடைசி ஓவரில் அன்ரிட்ஜ் நோர்ட்ஜே 5 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். 

இதனால் டெல்லி அணி 19.4 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை தரப்பில் பியுஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டார்ப் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ரிலே மியர்டித் 2 விக்கெட் எடுத்தார். 

இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. ஆட்டத்தின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

Share this story