ஐபிஎல் விறுவிறு : ரோகித் '1000' புதிய சாதனை..மோர்கனுக்கு 24 லட்சம் அபராதம்..

By 
IPL 'Rohit' 1000 'new record .. Morgan fined Rs 24 lakh ..

ஐபிஎல் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில், கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா 33 ரன்கள் எடுத்தார். 

சாதனை முக்கியம்ல :

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் மூலம், கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் அவர் 1000 ரன்னை தொட்டார்.

ஒரு குறிப்பிட்ட ஐ.பி.எல் அணிக்கு எதிராக, எந்த ஒரு வீரரும் 1000 ரன்னை எடுத்தது இல்லை. 

இதன்மூலம், ரோகித்சர்மா புதிய சாதனையை படைத்தார்.

மெதுவாக வீசலாமா? :

மேலும், நேற்றைய மும்பை-கொல்கத்தா போட்டியில் கொல்கத்தா அணி மீது மெதுவாக பந்து வீசியதாக புகார் எழுந்தது. 

அவர்கள் நிர்யணிக்கப்பட்ட 20 ஓவர் வீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டனர். 

மெதுவாக பந்து வீசியதற்காக, கொல்கத்தா அணி கேப்டன் மார்கனுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதோடு, அந்த அணியில் உள்ள மற்ற 10 வீரர்களுக்கும் தலா ரூ.6 லட்சத்துக்கும் குறைவாக அல்லது போட்டியில் இருந்து பெறும் பணத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும்.

Share this story