ஐபிஎல் தொடர் : ஐதராபாத்தை விரட்டி, பஞ்சாப் பறித்த 4-வது வெற்றி..ஆடுகள விவரம்..

IPL series Punjab chase down Hyderabad, 4th win..Field details ..

ஐபிஎல். கிரிக்கெட் தொடரில்,  சார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடின. 

125 ரன்கள் :

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் சேர்த்தது. 

அதிகபட்சமாக மார்கிராம் 27 ரன்கள் எடுத்தார். கேப்டன் கே.எல்.ராகுல் 21 ரன்களும், ஹர்பிரீத் 18 ரன்களும் (நாட் அவுட்), கிறிஸ் கெயில் 14 ரன்களும், தீபக் ஹுடா 13 ரன்களும் எடுத்தனர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

தத்தளிப்பு :

இதையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது. பஞ்சாப் அணியின் பந்து வீச்சில் ஐதராபாத் அணி வீரர்கள் திணறினர். 

ஒரு கட்டத்தில் 60 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து ஐதராபாத் தத்தளித்தது.

தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சகாவுடன் ஜேசன் ஹோல்டர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து ஆடியது. 
சகா 31 ரன்னில் அவுட்டானார். 

5 ரன் வித்தியாசம் :

இறுதியில், ஐதராபாத் 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதன்மூலம் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹோல்டர் 47 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பஞ்சாப் அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும்.

Share this story