ஐபிஎல் மிரட்டல் : பெங்களூரு அணிக்கு, ராஜஸ்தான் இன்று பதிலடி கொடுக்குமா? பலியாகுமா?

By 
IPL threat Will Rajasthan retaliate against Bangalore today Will the victim

ஐபிஎல் போட்டியில் 2-வது கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

பிளே ஆப் வாய்ப்பு :

இதுவரை 42 ஆட்டங்கள் முடிந்து உள்ளன. ஆனால் எந்த ஒரு அணியும் அதிகாரப்பூர்வமாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் 16 புள்ளிகள் பெற்றுள்ளன. இந்த 2 அணிகளும் கிட்டத்தட்ட பிளேஆப் வாய்ப்பை நெருங்கி விட்டன. 

சென்னை அணிக்கு இன்னும் 4 ஆட்டங்கள் உள்ளன. அதே நேரத்தில், டெல்லி அணிக்கு 3 ஆட்டமே எஞ்சி உள்ளது.

பெங்களூரு அணி 12 புள்ளிகளுடனும், கொல்கத்தா, மும்பை தலா 10 புள்ளிகளுடனும், பஞ்சாப், ராஜஸ்தான் தலா 8 புள்ளிகளுடனும், ஐதராபாத் 4 புள்ளிகளுடனும் உள்ளன. முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும்.

நம்பிக்கை :

43-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கிறது. இதில் சஞ்சுசாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

பெங்களூர் அணி ராஜஸ்தானை வீழ்த்தி 7-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும், தோற்றாலும் அந்த அணி அதே 3-வது இடத்தில் நீடிக்கும்.

முதல் கட்ட போட்டியில் பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி இருந்தது. இதனால், அந்த அணி நம்பிக்கையுடன் விளையாடும்.

இதுவரை :

புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பெங்களூருக்கு பதிலடி கொடுத்து 5-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

இரு அணிகளும் மோதிய போட்டியில் பெங்களூரு 11 ஆட்டத்திலும், ராஜஸ்தான் 10 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி முடிவு இல்லை. 

இரு அணியிலும் அதிரடியான வீரர்கள் இருப்பதால், இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story