அசராமல் ஆடி தொடரை வென்றது அயர்லாந்து : ஆட்டநாயகன் யார் தெரியுமா?

By 
Ireland win Aussie series Do you know who the captain is

அயர்லாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.

இரு அணிகள் இடையிலான முதல் போட்டியில், வெஸ்ட்இண்டீஸ் 24 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில், அயர்லாந்து 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றதால், ஒருநாள் தொடர் 1-1 என சமனிலையில் இருந்தன.

பேட்டிங் :
 
இந்நிலையில், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்து அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நடைபெற்றது.
டாஸ் ஜெயித்த அயர்லாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 44.4 ஓவரில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் அரை சதமடித்து 53 ரன்னில் வெளியேறினார். ஜேசன் ஹோல்டர் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அயர்லாந்து சார்பில் ஆன்டி மெக்பிரின் 4 விக்கெட்டும், கிரேக் யங் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி விளையாடியது. ஆன்டி மெக்பிரின் 59 ரன்னும், ஹாரி டெக்டர் 52 ரன்னும் எடுத்தனர்.

ஆட்டநாயகன் :

இறுதியில், அயர்லாந்து 44.5 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், அயர்லாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

வெஸ்ட்இண்டீஸ் சார்பில் அகில் ஹுசைன், ரோஸ்டன் சேஸ் தலா 3 விக்கெட் சாய்த்தனர். 

அயர்லாந்து அணி வீரர் ஆன்டி மெக்பிரின் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Share this story