கோலிக்கு நோட்டீஸ் அனுப்பியது உண்மையா? : கங்குலி விளக்கம்

By 
Is it true that the notice was sent to Cole

உலக கோப்பை போட்டிக்கு முன்பு, 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார். 

அதைத் தொடர்ந்து, ஒருநாள் போட்டி கேப்டன் பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. 

மோதல் :

கேப்டன் பதவி விவகாரத்தில் விராட் கோலிக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவர் கங்குலிக்கும் இடையே மோதல் இருப்பதாக தகவல் பரவியது. 

இதனிடையே, டி20 கேப்டன் பதவியை விட்டு விலகவேண்டாம் என்று விராட் கோலியிடம் கூறியதாக கங்குலி கூறினார். 

ஆனால், தம்மிடம் அப்படி யாரும் கூறவில்லை என்று பத்திரிகையாளர் சந்திப்பில் விராட் கோலி கூறினார். 

இருவரும் மாறுபட்ட கருத்தை சொன்னதால், குழப்பம் இருப்பது தெளிவாக தெரிந்தது. 

இந்நிலையில், இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக சமீபத்தில் விராட் கோலி அறிவித்தார்.

மறுப்பு :

இந்நிலையில், 'விராட் கோலிக்கு நோட்டீஸ் அனுப்ப இருந்ததாக வெளியான தகவல்கள் உண்மையல்ல' என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார் 

கேப்டன் பதவி குறித்த கருத்துக்கு விளக்கம் அளிக்குமாறு, கோலிக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டதாக தகவல் வெளியான நிலையில், கங்குலி மறுப்பு தெரிவித்துள்ளார்.

Share this story