கேப்டன் பதவிக்கு, ரோகித் பொருத்தமானவரா? : கவாஸ்கர் பதில்

Is Rohit suitable for the captaincy  Gavaskar Answer

20 ஓவர் போட்டியில், கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா பொருத்தமானவர் என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில், இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி பதவி விலகியதால், அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில், 20 ஓவர் போட்டியில் கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா பொருத்தமானவர் என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் கூறியதாவது :

20 ஓவர் கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா சிறந்தவர். அடுத்த உலக கோப்பைக்கு இன்னும் 10 முதல் 12 மாதங்களே உள்ளன. 

ரோகித் சர்மா ஐ.பி.எல். போட்டியில், மும்பை அணியை சிறப்பாக வழி நடத்தியுள்ளார். 

எனவே, ரோகித் சர்மாவுக்கு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு கொடுத்தது சரியே' என்றார்.
*

Share this story