சரக்கு அடிக்காம வந்தது எனக்கே அசிங்கமா இருக்கு : ஸ்டீவ் ஸ்மித் ஓபன் டாக்..

 

By 
smit1

சமீபத்தில் நடந்த முடிந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது. இந்நிலையில் இந்த முறைதான் ஆஷஸ் தொடர் முடிந்த பிறகு பீர் அடிக்காம வந்திருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

ஆஷஸ் தொடர் முடிந்த பிறகு வீரர்கள் பீர் குடிக்கலாம் என பேசி கொண்டிருந்தோம். அப்போது பென் ஸ்டோக்ஸ் தங்கியிருந்த அறைக்கு சென்று அறையின் கதவை தட்டினோம். அவர் சிறிது நேரம் கழித்தே கதவை திறந்தார். வந்த வேகத்தில் 2 நிமிடம் காத்திருங்கள் என்று கூறி சென்றார்.

ஒரு மணி நேரம் ஆகியும் வராத காரணத்தால் பீர் அடிக்க வேண்டாம் என்று கூறி நாங்கள் அந்த இடத்தை விட்டு கிளம்பினோம். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு தொடர் முடிந்த பிறகு பீர் குடிக்காமல் வந்தது இதுவே முதல் முறை. இது அசிங்கமாக இருந்தது. ஆனால் சில மணி நேரம் கழித்து வந்த பென் ஸ்டோக்ஸ், ஒரு வேலையாக சென்றதால் தாமதமாகி விட்டது.

மன்னித்து விடுங்கள். மது அருந்துவது என்று முடிவு செய்து விட்டோம். அதனால் அதை கைவிட வேண்டாம். கண்டிப்பாக மது அருந்தி விட்டு செல்லலாம் என அவர் கூறினார். அவர் கூறும் அந்த வேலை நான் எனது அறைக்கு சென்று இருந்தேன். மது அருந்தாத மற்ற வீரர்கள் அவருடன் சேர்ந்து மது அருந்தி மகிழ்ந்தனர். இவ்வாறு அவர் கூறினார். 
 

Share this story