இந்திய அணியை ஜெயிக்க வைத்த ஜம்பா: செம கடுப்பில் ஆஸ்திரேலிய கேப்டன்..

By 
jaja

ஆஸ்திரேலிய அணி தங்களின் ஒரே ஸ்பின்னரான ஆடம் ஜம்பாவை நம்பியே சென்னையில் நடந்த போட்டியில் இந்தியாவை எதிர் கொண்டது. ஆனால், அவர் மோசமாக பந்து வீசி முற்றிலுமாக அணியை கைவிட்டார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்த விஷயத்தில் கடும் விரக்தியில் தான் போட்டி முடிந்த உடன் பேசினார். ஜம்பா குறித்து பெரிதாக பேசவே மறுத்துவிட்டார். இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆடுகளம் பொதுவாகவே ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமாகவே இருக்கும். அதிலும், இந்தப் போட்டிக்காக தயார் செய்யப்பட்ட பிட்ச் பேட்டிங் செய்ய சுத்தமாக சாதகமாக இல்லை. ஸ்பின் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றதாக இருந்தது. அதை உணர்ந்த இந்திய அணி ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின் என மூன்று முழு நேர ஸ்பின்னர்களை களமிறக்கியது.

ஆஸ்திரேலியா மேக்ஸ்வெல் என்ற பகுதி நேர ஸ்பின்னரை முழு நேர ஸ்பின்னராக பயன்படுத்தியது. ஆனால், அந்த அணியின் முதன்மை ஸ்பின்னர் ஆடம் ஜம்பா மட்டுமே. இந்திய அணி திட்டமிட்டது போல ஸ்பின்னர்களை வைத்து ஆஸ்திரேலிய அணியை 199 ரன்களுக்கு சுருட்டியது. அடுத்து பந்து வீசிய ஆஸ்திரேலியா ஸ்டார்க், ஹேசல்வுட்டை வைத்து 2 ரன்களுக்கு இந்தியாவின் மூன்று விக்கெட்களை சாய்த்தது.

அதன் பின் மிடில் ஓவர்களில் ஆடம் ஜம்பா இந்திய அணியை தன் சுழற் பந்துகளால் சாய்த்து விடுவார் என நினைத்த நிலையில், அவர் தன் முதல் ஓவரிலேயே அதிர்ச்சி அளித்தார். அதுவரை டெஸ்ட் போட்டி போல ஆடி வந்த இந்திய அணி, அந்த ஓவரில் மூன்று ஃபோர் அடித்தது. உலககோப்பை புள்ளி பட்டியல்.. என்ன சொல்றீங்க? ஆஸி.யை வீழ்த்தியும் பாகிஸ்தானுக்கு கீழ் சென்ற இந்தியா அப்போதே இந்தியா தெம்பாக எழுந்து உட்கார்ந்து 3 விக்கெட் வீழ்ச்சியில் இருந்து மீண்டது.

அதன் பின் ஜம்பா ஓவர்களை குறி வைத்து விராட் கோலி - கே எல் ராகுல் ஜோடி ரன் குவித்தது. ஜம்பா தான் வீசிய 8 ஓவர்களில் 53 ரன்கள் வாரிக் கொடுத்தார். ஓவருக்கு 4 ரன்கள் அடிக்கக் கூடிய பிட்ச்சில் அவர் ஓவருக்கு 6.62 ரன்கள் கொடுத்தார். இந்திய அணி 41.2 ஓவரில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது. இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார் ஆடம் ஜம்பா.

இந்திய ஆடுகளங்கள் பலவும் ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள். இந்த நிலையில், ஜம்பா சரியாக பந்து வீசவில்லை என்றால் என்ன செய்வது? என்ற விரக்தியில் இருக்கிறார் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ். போட்டி முடிந்த உடன் அளித்த பேட்டியில் கூட அடம் ஜம்பா குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் கடந்து விட்டார்.

 

Share this story