இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு, கார்த்தி சிதம்பரம் வைத்த முக்கிய கோரிக்கை.. 

By 
kar22

இந்தியாவில் கிரிக்கெட் மீதான ஆர்வம் தீவிரமாக உள்ளது. தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தாலும் கிரிக்கெட் போட்டிக்கு இந்தியாவில் ரசிகர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. அந்த வகையில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு கிரிக்கெட் போட்டிக்கான ஆதரவை இந்திய ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட்டை உயிராகவும் மதித்து வருகின்றனர்.  கிரிக்கெட் வீரர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியும் மகிழ்கின்றனர். 

ஜாதி மதம் இல்லாமல் அனைவரும் கிரிக்கெட்டை ரசிக்கக்கூடிய நிலையில்,  இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை சேர்த்து இருப்பதாக தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்திய அணையில் ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ், குல் தீப் யாதவ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் தங்களது பெயருக்கு பின்னால் ஜாதியை அடையாளமாக வைத்துக் கொண்டுள்ளனர்.

தங்களது பெயருக்கு பின்னால் உள்ள ஜாதியின் அடையாளத்தை நீக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர் இந்த நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கிரிக்கெட் வீரர்களுக்கு பின்னால் இருக்கும் ஜாதிப் பெயர்களை நீக்க பிசிசிஐ அறிவுறுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

Share this story