கோலி நாளை 51-வது சதம் அடிப்பது உறுதி: முன்னாள் வீரர் கணிப்பு

By 
virat

இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வரும் நிலையில், முதல் அரையிறுதியில்  இந்திய அணி , நியூசிலாந்தை வீழ்த்தியது. எனவே வரவுள்ள இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமபாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில்  நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி  தன் 51 வது சதம் அடிப்பார் என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

பெரிய போட்டிகளில் விளையாடுவதற்காக உருவாக்கப்பட்ட வீரர் விராட் கோலி. இவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தனது 51 வது சதத்தை அடிப்பார் என நினைக்கிறேன். 

விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அதிக ரன்கள் குவிப்பது அவருக்கு பிடிக்கும். இந்த அணிக்கு எதிரான அவர் 8 சதங்கள் அடித்துள்ள நிலையில், இறுதிப்போட்டியிலும் அடிப்பார் என்று தெரிவித்துள்ளார்.

Share this story