மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி : தடையை தகர்த்து, ஸ்ரீகாந்த்-சிந்து செம ஆட்டம்..

By 
Masters Badminton Tournament Breaking the Barrier, Srikanth-Sindhu Sham Game ..

பாலியில் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சூப்பர்-750 பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. 

இதில், இந்தியாவின் நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் முன்னணி வீரர், வீராங்கனைகள் முதல் தடையை கடந்துள்ளனர்.

ஸ்ரீ காந்த் :

முன்னாள் நம்பர்-1 வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த், தனது துவக்க ஆட்டத்தில் (ஒற்றையர் முதல் சுற்று) பிரான்ஸ் வீரர்  கிறிஸ்டோ பாபோவை 21-18 15-21 21-16 என்ற செட்கணக்கில் வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். 

அடுத்த சுற்றில் ஸ்ரீகாந்த் அநேகமாக இந்தோனேசிய வீரர் ஜோனாதனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், இந்தியாவின் துருவ் கபிலா-சிக்கி ரெட்டி ஜோடி, இந்தோனேசியாவின் பிரவீன் ஜோர்டான்-மெலாட்டி தேவா ஜோடியை 21-11 22-20 என்ற நேர்செட்களில் வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

மற்றொரு முன்னணி இந்திய வீரரான பருபள்ளி காஷ்யப், தனது முதல் ஆட்டத்தில் டென்மார்க் வீரர் ஹன்ஸ் கிறிஸ்டியனிடம் 10-21 19-21 என்ற செட்கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். 

சிந்து :

பி.வி.சிந்து, லக்சயா சென் ஆகியோர் ஏற்கனவே 2-ம் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
*

Share this story