மேட்ச் மிரட்டல் : ஒரு செம பவுலரின், 'தெறி' சாதனையும், டீன் ஏஜில் ஓய்வு பெற்ற ஒரு வீரரும்.

By 
Match Intimidation The record of a bowler, 'Theri' and a player who retired in his teens.

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், இந்த இன்னிங்சில் 29 ஓவர்களில், 7 மெய்டனுடன் 62 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

அவர் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் சாய்ப்பது இது 31-வது நிகழ்வாகும். லண்டன் லார்ட்சில் மட்டும் இத்தகைய சாதனையை 7 முறை செய்திருக்கிறார். ஆண்டர்சனின் தற்போதைய வயது 39 ஆண்டு 14 நாட்கள். 

இதன் மூலம், கடந்த 70 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய மூத்த வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பைப் பெற்றார்

* டெல்லியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் உன்முக் சந்த் கடந்த 2012-ம் ஆண்டு ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில், இந்தியா மகுடம் சூடியதில், முக்கிய பங்கு வகித்தார்.

அந்த உலக கோப்பையில், கேப்டனாக செயல்பட்ட உன்முக் சந்த் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில், 111 ரன்கள் விளாசி 226 ரன் இலக்கை விரட்டிப்பிடிக்க உதவினார். 

இந்திய கிரிக்கெட்டில், அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்று, அப்போது முன்னாள் வீரர்கள் பலரும் ஆரூடம் சொன்னார்கள். ஆனால், இந்திய சீனியர் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி, ராஜஸ்தான், மும்பை ஆகிய அணிகளுக்காக விளையாடியும் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.

இந்நிலையில், 28 வயதான உன்முக் சந்த் எல்லா வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும், 'டீன் ஏஜ்' வயதிலேயே ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

Share this story