7-வது முறையாக ஹாட்ரிக் அடித்து, மெகா  சாதனை : மெஸ்சி செம கெத்து..

By 
Messi scores hat-trick for the 7th time Messi

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி, கத்தாரில் அடுத்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்கிறது. 

இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள், பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. 

தகுதிச் சுற்று :

இதில், தென்அமெரிக்க கண்ட அணிகளுக்கான தகுதிச்சுற்றுப் போட்டியில், அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்த ஆட்டம் ஒன்றில், லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி, பொலிவியாவை எதிர்கொண்டது.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை தோற்கடித்தது. 

7-வது முறை :

34 வயதான மெஸ்சி 14-வது, 64-வது, 88-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்கள் அடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். அவர் சர்வதேச போட்டியில் ‘ஹாட்ரிக்’ கோல்கள் அடிப்பது இது 7-வது முறையாகும்.

இந்த போட்டியில், மெஸ்சி 2-வது கோலை அடித்தபோது, சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்த தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த வீரர் என்ற சாதனையை தன்வசப்படுத்தினார். 

அவர் 153 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 79 கோல்கள் அடித்துள்ளார். 

இதற்கு முன்பு, பிரேசில் முன்னாள் கதாநாயகன் பீலே (77 கோல்கள், 92 ஆட்டங்களில்) அதிக கோல் அடித்த தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த வீரராக விளங்கினார். அவரது சாதனையை மெஸ்சி முறியடித்து இருக்கிறார்.

5-வது இடம் :

சர்வதேச போட்டியில், ஒட்டுமொத்தத்தில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ (180 ஆட்டங்களில் ஆடி 111 கோல்கள்) முதலிடத்தில் இருக்கிறார். 

இந்த வரிசையில் மெஸ்சி 5-வது இடத்தை ஜாம்பியா வீரர் காட்பிரையுடன் இணைந்து வகிக்கிறார்.

Share this story