தெறிக்கவிட்டார் மிட்செல் மார்ஷ், திணறிப் போனார் கிறிஸ் கெயில்..

Mitchell Marsh splashes Chris Gayle suffocates

வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இன்று அதிகாலை :

4-வது போட்டி, இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் மேத்யூ வடே 5 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால், ஆரோன் பிஞ்ச் 37 பந்தில் 53 ரன்களும், அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 44 பந்தில் 75 ரன்களும் விளாசினர். 

இதனால், ஆஸ்திரேலியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது.

பின்னர், 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. 

ஒரு ரன் :

தொடக்க வீரர் லென்டில் சிம்மன்ஸ் 48 பந்தில் 72 ரன்கள் குவித்தார். எவின் லீவிஸ் 14 பந்தில் 31 ரன்கள் விளாசினார். கிறிஸ் கெயில் 1 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.

கடைசி 2 ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. அந்த்ரே ரஸல், பேஃபியன் ஆலன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரஸல் ஒரு சிக்ஸ், ஆலன் 3 சிக்ஸ் விளாசினர். 

ஆனால், கடைசி பந்தில் ஆலன் ஆட்டமிழந்தார். என்றாலும் 25 ரன்கள் இந்த ஓவரில் கிடைத்தது. இதனால், கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது.

மிட்செல் மார்ஷ் :

மிட்செல் ஸ்டார்க் கடைசி ஓவரை வீழ்த்தினார். அந்த்ரே ரஸல் முதல் நான்கு பந்துகளை சந்தித்தார். அதில் ஒரு ரன் கூட அவரால் அடிக்க முடியவில்லை. 4-வது பந்தில் 2 ரன்களும், கடைசி பந்தில் 4 ரன்களும் அடித்தார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களே எடுத்து 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

75 ரன்களுடன், 4 ஓவரில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து, 3 விக்கெட் வீழ்த்தி மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Share this story