மிட்ஷெல்-வார்னர் : இருவரும் அதிரடி நாயகர்கள் ஆகினர்..எப்டின்னா..

By 
Mitchell-Warner Both became action heroes.

டி20 உலக கோப்பையின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. 

இதில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், பரபரப்பாக போட்டி தொடங்கியது.

77 ரன்கள் :

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. 

கேப்டன் கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆடி 85 ரன்கள் குவித்தார். 

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 18.5 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மிட்செல் மார்ஷ் அதிரடியாக ஆடி 77 ரன்கள் எடுத்தார். டேவிட் வார்னர் அரை சதமடித்தார்.

நாயகன்கள் :
 
இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில், ஆட்ட நாயகன் விருது மிட்செல் மார்ஷுக்கும், தொடர் நாயகன் டேவிட் வார்னருக்கும் வழங்கப்பட்டது.
*

Share this story