என்றென்றும் 'தல'யாக இருக்கிறார் எம்.எஸ்.டோனி : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

By 
msdb

இந்திய கிரிக்கெட்டில் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ். டோனிக்கு இன்று பிறந்த நாள். அவர் 42 வயதை நிறைவடைந்து, 43-வது வயதிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.

பிறந்த நாளையொட்டி அவருக்கு தலைவர்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் அவருக்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எம்.எஸ். டோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

''சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் என்றென்றும் 'தல'யாக இருக்கும் எம்.எஸ். டோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களுடைய சாதனைகள் மற்றும் தன்னடக்கம் ஏராளமான இளைஞர்களுக்கு உத்வேகமாக இருந்திருக்கிறது.

குறிப்பாக சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர்களுக்கு உத்வேகமாக இருந்துள்ளீர்கள். தொடர்ந்து பிரகாசிக்கவும், உங்கள் ஒப்பற்ற தலைமைப் பண்புகளால் அனைவரையும் ஊக்குவிக்கவும் வாழ்த்துக்கள்'' என பதிவிட்டுள்ளார்.


 

Share this story