எம்.எஸ்.டோனி-அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்ப் உடன் கோல்ஃப் விளையாட்டு : வைரலாகும் நிகழ்வு..

* இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனுமான எம்.எஸ். டோனி அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் கோல்ஃப் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.
டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்ததன் பேரில் எம்.எஸ். டோனி கோல்ஃப் விளையாட சென்றதாக கூறப்படுகிறது. அதன்படி இருவரும் கோல்ஃப் விளையாடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
* 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. அனைத்து போட்டிக்கான 2-ம் கட்ட டிக்கெட் விற்பனை இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் என பிசிசிஐ நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. இன்று முதல் சுமார் 4 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்ய இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
https://tickets.cricketworldcup.com என்ற இணைய தளத்தில் டிக்கெட்டுகளை புக் செய்யலாம். அரையிறுதி, இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை குறித்து உரிய நேரத்தில் ரசிகர்களுக்கு தெரிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளார். ரசிகர்கள் பேரார்வம், பங்களிப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.