என் அம்முக்குட்டி, என் பொம்முக்குட்டி, என் புஜ்ஜிக்குட்டி.. பூனையுடன் ஒரு மேட்ச் : கோலி பதிவு வைரலாகிறது..

My niece, my niece, my niece .. A match with a cat Goalie record goes viral ..

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக, ஒரு கையில் பூனையுடன் கோலி பயிற்சி செய்யும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர், வரும் வியாழக்கிழமை தொடங்க உள்ளது. இந்நிலையில் இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி, தான் பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அதனை பதிவிட்டுள்ள அவர், ஒரு கையில் பூனை ஒன்றுடன் செல்லமாய் கொஞ்சி விளையாடுகிறார்.

அவருடைய இந்த பதிவிற்கு, அவருடைய மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் செல்லமாய் பதில் அளித்துள்ளார்.

இந்த இன்ஸ்டாகிராம் பதிவு,  தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
*

Share this story